Month: August 2017

ஸ்டார்ட்அப் ZOHO 500 மில்லியன் டாலர் நிறுவனமாக வளர்ந்தது எப்படி?

August 25, 2017

ஸ்டார்ட்அப் உருவாக்கத்தின் பாலபாடம் சந்தையின் தேவையை சரியாக கணித்து, அதில் உள்ள இடைவெளிகளை பூர்த்தி செய்ய வேண்டிய தொழில்நுட்பத்தை கண்டறிவது. அதை எந்த முன் அனுபவமும் தேவையின்றி எவரும் புரிந்து கொள்ளக்கூடிய மிக எளிமையான வடிவத்தில் தயாரித்து வழங்குவது மிக அவசியம். இதை மிகச் சரியாக செய்து வெற்றி மேல் வெற்றி பெற்ற ஒரு சென்னை ஸ்டார்ட்அப் தான் Zoho. 1996. இணையம் கொடிவிட்டு பரவ ஆரம்பித்த புதிது. நெட்வொர்க் மென்பொருட்களின் தேவை மிக அதிகமாக இருந்த […]

Read More

ஸ்டார்ட்அப் தொடங்க இந்தக் குணம் அதிஅவசியம்!

August 25, 2017

கனவு காணுங்கள் என்பார் அப்துல்கலாம். எல்லையை தாண்டி கனவு காணுங்கள் என ஒரு படி அதிகமாக சொல்லும் ஸ்டார்ட்அப் உலகம். அந்த உலகத்தில் போகத் துடிக்கும் எவரும் கனவிலும் நிகழாத காரியத்தை மேற்கொள்ள நேர்ந்தாலும் “இது நடக்க வாய்ப்பே இல்லை” என்று சொல்வது தவறு. இது நடக்க இன்று தொழில்நுட்பம் போதவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அப்படி யாரும் யோசிக்காத அல்லது யோசிக்க தயங்கிய ஒரு ஐடியாவை வெற்றிகரமாக துணிந்து செய்துகொண்டிருப்பவர் தான் எலன் மஸ்க் […]

Read More

நீங்கள் நம்பும் விஷயத்துக்கு ரிஸ்க் எடுங்கள்… எலன் மஸ்க் செய்தது அதுதான்!

August 25, 2017

‘வானம் வசப்படும்’ என்ற இந்த சொற்றொடர் தமிழில் நாவல்கள், கதைகள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்படங்கள், திரைப்பாடல்கள் என்று நிறைய வந்துள்ளது. காரணம் அந்த சொற்களில் உள்ள பிரமாண்டமான ஊக்கசக்தி. உண்மையிலேயே வானத்தை வசப்படுத்திய மனிதர் என்றால் அது எலன் மஸ்க் தான். Zip2வில் இருந்து 22மில்லியன் டாலர்களுடன் வெளியே வந்தவர் X.com என்ற பெயரில் சொந்த முதலீட்டில் ஆன்லைன் வங்கி வர்த்தக நிறுவனத்தை தொடங்குகிறார். இதே தொழில்நுட்பத்தில் Confinity என்ற இன்னொரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தோடு மல்லுக்கட்டவேண்டி இருக்கிறது. […]

Read More

ஏறி அடிக்கணும்னா இறங்கி வேலை பாரு..! இது டோனி ஸ்டைல்

August 25, 2017

டோனி அடுத்த இன்னிங்க்ஸ்க்கு தயாராகி வருகிறார். ஆனால் அதற்குமுன் நிறைய தேடுவார். அவர் தேடல் கைகூடி விட்டால் துணிந்து அடித்து விளையாடுவார். நான் நம்ம மகேந்திரசிங் தோனியை சொல்லவில்லை. ஜாப்போஸ்(Zappos) நிறுவனர் டோனி ஷெய்(Tony Shieh) பற்றி சொல்கிறேன். ஒருநாள் நிக் ஸ்வின்மன்(Nick Swinmurn) என்ற தொழில்முனைவோர் ஆன்லைன் மூலமாக ஷூ, செப்பல் உள்ளிட்ட பலதரப்பட்ட காலணிகளை விற்கமுடியும், அதற்கு முதலீடு வேண்டுமென்றும் டோனிக்கு மெயில் அனுப்புகிறார். முதலில் கண்டுகொள்ளாத டோனி, நிக்கின் கடைசி மெயிலில் ஒரு […]

Read More

உலகையே தெறிக்க விட்ட ஸ்டார்ட்அப்… ஜாக்பாட் அடிச்ச கூகுள்!

August 25, 2017

அது உலகை உள்ளங்கையில் ஆட்டிப் படைத்து வருகிறது. அதை நீங்களும் நானும் கூட உபயோகிக்கிறோம். கோடி ரூபாய் பெறுமானமுள்ள தொழில்நுட்ப பொருட்களை அது இலவசமாக கொடுத்து வருகிறது. டெர்மினேட்டர் திரைப்படத்தில் வரும் ஜெனிசிஸ் போல எங்கும் வியாபித்து இருக்கும். இப்போது கண்டுபிடித்திருப்பீர்கள். ஆம் ஆண்ட்ராய்டு மொபைல் செயலி தான் அது. ஆண்ட்ராய்டு என்ற அந்த ஒரு ஸ்டார்ட்அப் பல லட்சக்கணக்கான ஸ்டார்ட்அப் உருவாக காரணமாகி இருக்கிறது. அது தான் சிறப்பிலும் மிகச் சிறப்பு என்பேன். ஸ்டார்ட்அப் ஆண்டிரூபின் […]

Read More

புலித்தோல் போர்த்தி பூனை வென்ற கதை..!

August 25, 2017

ஸ்டார்ட்அப் கதைகளில் சில விசித்திரமான, இப்படி கூட நடக்குமா என்று ஆச்சர்யப்பட வைக்கும் சம்பவங்களும் நடக்கும். நீங்கள் ஒரு பொருளை விற்கிறீர்கள். அதே பொருளை அனுபவம் இல்லாத புதியவர்கள் உங்களிடம் இருந்து கடனாக வாங்கி அந்த பொருளுக்கு வண்ணம் அடித்து, அழகாக பேக்பண்ணி அதே சந்தையில் விற்று உங்களைவிட அதிகம் சம்பாதிக்கிறார்கள். அதுவும் மிக சின்னக் குழு இதை சாதித்தார்கள் என்றால்? அதை தான் மின்ட்(mint) செய்து காட்டினார்கள். 1999ல் வெங்கட் ரங்கன் என்ற அமெரிக்கவாழ் இந்தியர் […]

Read More

ஆப்பிள் என்றால் ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டுமல்ல… இந்த X-ம் தான்!

August 25, 2017

ஆப்பிள் கம்ப்யூட்டர் என்றவுடன் எல்லோருக்கும் ஞாபகம் வரும் பெயர் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆனால் ஸ்டீவ்விற்கு வேறொருவர்தான் கண் முன் நிற்பார். எல்லோரும் ஸ்டீவ்விற்காக காத்திருக்க இவர் அந்த இன்னொருத்தருடன்தான் பொழுதுகளை கழித்தார். நீங்கள் நினைப்பது போல அந்த X ஸ்டீவின் காதலி அல்ல. அதற்கும் மேலே. ஆன்மிகத் துணைவர் (Spritual Partner). ஆம் அப்படிதான் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பு அதிகாரி ஜோனதன் ஐவியை (Jonathan Ive) பற்றி ஸ்டீவ் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார். ஆப்பிள் நிறுவனர் […]

Read More

ஒரு நிராகரிப்பின் பிரமாண்ட பதிலடி..! வாவ்… வாட்ஸ்அப் வரலாறு!

August 25, 2017

ஒரு தொழில்முனைவோராக மட்டுமல்ல வாழ்வில் வெற்றி பெறத் துடிக்கும் எவரும் ஒருமுறை வாட்ஸ்அப்பின் கதையை படித்துவிடுவது நல்லது. அதில் அத்தனை பாடங்கள் உள்ளன. 2007ஆம் ஆண்டில் யாகூவில் இருந்து இரண்டு இளைஞர்கள் விலகுகிறார்கள். அவர்கள் அமெரிக்காவின் தென்பகுதியை நோக்கி ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்கிறார்கள். பிரையன் அக்டன் (Brian Acton) , ஜான் கோம் (Jan Koum) என்ற அந்த இளைஞர்கள் அந்தப் பயணத்திற்கு பிறகு ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்று பெரிய இலக்கை நோக்கி முயல்கிறார்கள். 2008இன் […]

Read More

ஆன்லைன் வணிக அசுரன் அலிபாபா..! உருவான கதை தெரியுமா?

August 25, 2017

ஒரு எலெக்ட்ரானிக் நிறுவனத்தின் தலைவர் தன் இரு சேல்ஸ்மேன்களிடம் “ஆப்பிரிக்காவிற்கு செல்லுங்கள். அங்கு நமது ரேடியோவிற்கு சந்தை இருக்கிறதா” என்று பார்த்து வாருங்கள் என்று அனுப்பினார். இருவரும் ஆப்பிரிக்கா முழுதும் சுற்றிவிட்டு வந்து நிறுவனரிடம் ரிப்போர்ட் செய்தார்கள். முதல் சேல்ஸ்மேன் “நம்ம ரேடியோவிற்கு அங்கு சந்தையே இல்லை. ஏனென்றால் அங்கு பெரும்பாலான ஊர்களில் மின்சாரமே இல்லை. மின்சாரவசதி இல்லாத ஊரில் எப்படி நம்ம பொருள் விற்கும்?” என்று கூறினார். இரண்டாவது சேல்ஸ்மேனிடம் வரும்போதே அத்தனை உற்சாகம். “சார். […]

Read More

10 வயதில் சர்வர் வேலை… 20 வயதில் சர்வரைத் தயாரிக்கும் வேலை..!

August 25, 2017

மிரட்டலான ஸ்டார்ட்-அப் கதை என்றால் அது டெல் நிறுவனத்தின் நிறுவனர் மைக்கேல் டெல்லின் கதை தான். ஒரு பிசினஸில் நுழைவதற்கு உயர்நிலை பள்ளியில் படித்த சான்றிதழ் அல்லது அதற்கு இணையான தேர்வில் எழுதி வென்ற சான்றிதழ் வேண்டும். அதற்காக விண்ணப்பிக்கிறார். அப்போது அவரின் வயது வெறும் எட்டு என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அப்படிதான் நடந்திருக்கிறது. பத்துவயதிற்கு பிறகு அவரது பள்ளிப்படிப்பு அத்தனையும் அவரது வருமானத்தில் செல்கிறது. அதற்காக அவர் செய்யாத வேலை இல்லை. பன்னிரெண்டு வயதில் […]

Read More

Enjoy this blog? Please spread the word :)