Month: August 2017

அமெரிக்காவில் ஒரு மிஸ்டர் பாரத் கதை..!

1980 களில் வெளிவந்த ரஜினிகாந்த் திரைப்படத்தைப் போல நம்பமுடியாத கதை அவருடையது. ஒரு யூத இளம்பெண் அமெரிக்க போர்விமானியின் காதலில் விழுகிறார். காதல் அவள் வயிற்றில் ஒரு குழந்தையைக் கொடுக்கிறது. காதலன் சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிடுகிறான். அவள் மிக இளம்வயதில் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அவளால் அந்தக் குழந்தையைப் பேணிகாக்க முடியவில்லை. குழந்தைக்கு நிமோனியா தாக்குகிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை. தன் ஒன்பது மாதக்குழந்தையைக் குழந்தைபேறு இல்லாத உறவுக்கார தம்பதிகளிடம் கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறார். அதன்பிறகு அந்தத் தம்பதிகள் நியூயார்க்கில் […]

கூகுள் முதல் ட்விட்டர் வரை… அமேசான் நிறுவனரின் ஸ்டார்ட்அப் காதல்!

ஜெப் பெசாஸ் துறுதுறுவென்று இருக்கும் குழந்தை. 4 வயதாக இருக்கும்போது அவரது பெற்றோர்கள் விவாகரத்து பெற்று பிரிகிறார்கள். பின்னர் ஜெப்பின் தாயார் ஜாக்லின் கியூபாவில் இருந்து பிழைக்க வந்த மிக்கேல் பெசாஸ் என்ற எஞ்சினியரை மணக்கிறார். வளர்ப்புத் தந்தையின் பெயரே இவரது துணைப்பெயராக சேர்கிறது. சிறுவயதில் நிறைய புத்தகங்களை படிக்கிறார் ஜெப். வளர்ந்து இளைஞரான பிறகு கல்லூரியில் படித்து முடித்தபின் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல வேலைகளை செய்கிறார். ஆனால் எந்த வேலை செய்தாலும் அதில் அவரது தடம் […]

அகதி ஆக்கியது டிரம்ப்… அடைக்கலம் தந்தது யார்?

ஒரு நண்பர் கேட்டார். “ஸ்டார்ட்அப் பற்றி எழுதுறீங்க சரி. ஆனால் நாட்டு நடப்பு எதுவும் சரியில்ல… டிமானிடைசேசன் ஜிஎஸ்டி என்று அரசு நம்மை வாட்டி வதைக்குது. இப்போ எப்படிப்பா தொழில் தொடங்குவது”. அவருக்கு Airbnbயின் கதையைச் சொல்ல ஆரம்பித்தேன். இறுதிவரை கேட்டுவிட்டு இப்படி சொன்னார் ”உண்மை தான்… வெற்றி என்பது நேரம் காலத்தில் எல்லாம் இல்லை… வெல்வோம் என்ற நம்பிக்கையில் தான் இருக்கிறது.” 2008 உலகப் பொருளாதாரம் மேற்குலக நாடுகளை உருட்டி எடுத்த நேரம். உலக பணக்காரர்கள், […]

கேண்டி கிரஷ் விளையாடாமல் உங்களால் இருக்க முடியாது. ஏன் தெரியுமா?

விளையாட்டு என்பது இந்த நூற்றாண்டில் வெறும் வேடிக்கை அல்ல. அது ஒரு சீரியஸ் பிஸினஸ். அது, களத்தில் ஆடும் ஆட்டம் என்றாலும், கைக்குள் அடங்கும் மொபைலில் ஆடும் ஆட்டம் என்றாலும் பில்லியன் டாலர்கள் புழங்கும் பெரிய பிஸினஸ். இப்போதெல்லாம், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதற்குத் தயங்குவதே இல்லை. அவர்கள், ஒரு மொபைலில் அந்த கேம் இருந்துவிட்டால் போதும், பசி தெரியாது, தூக்கம் தெரியாது, நீண்ட காத்திருப்பு தெரியாது, கவலை தெரியாது. எமனே பாசக்கயிற்றுடன் வந்தாலும் ”இருப்பா, கொஞ்சம் […]

இது சின்ன பசங்க காலம்… பெருசுகளை இன்ஸ்டாகிராம் தோற்கடித்த கதை!

ஒரு நூற்றாண்டுக்கு மேல் புகைப்படத் துறையில் ஆண்டு வந்த பல பெரிய நிறுவனங்கள் இன்று காணாமல் சென்றுவிட்டன. அந்த புகைப்படத்துறை மக்கள் கையில் ஒரு மொபைல் போனாக சுருங்கி புது அவதாரம் எடுக்கும்போது சில பல ஜிம்மிக்ஸ் வேலைகளைப் பார்த்து அதை இணையத்தில் ஒருத்தருக்கு ஒருத்தர் பகிரச் செய்து அதன்மூலம் பெரிய அளவில் வெற்றி பெற்ற ஸ்டார்ட்அப் தான் இன்ஸ்டாகிராம். இன்று இன்ஸ்டாகிராம் எந்தளவுக்கு எல்லோரையும் வியாபித்து இருக்கிறது என்றால் டிவிட்டர், ஸ்னாப்சாட் போன்ற சீனியர்களையும் ஓரங்கட்டி […]

விக்கிபீடியாவில் தேடியிருப்பீர்கள்… விக்கிபீடியா பற்றி தேடியிருக்கிறீர்களா?

எல்லா ஸ்டார்ட்அப்புகளும், தொழில்முனைவோர்களும் பணம் சம்பாதிக்க மட்டும் உருவாவதில்லை. சிலருக்குப் பணத்தை விட சாதனை பெரிது. கணினி யுகத்தில் பல தொழில்நுட்பங்கள் இலவசமாக மக்களுக்குத் திறந்துவிடப்பட்டவை. அவை அவ்வாறு உருவாகவில்லை என்றால் இன்று பல தொழில்கள் பிறந்திருக்க வாய்ப்பே இல்லை. லினக்ஸ், பிஹெச்பி, அப்பாச்சி சர்வர் போன்ற தொழில்நுட்பங்கள் இலவசமாகத் திறந்துவிடப்படவில்லை என்றால் இன்று ஃபேஸ்புக் இல்லை, யாகூ இல்லை, பல இணையதளங்கள் உருவாகியிருக்கும் வாய்ப்புகள் குறைவுதான். என்சைக்ளோபீடியா என்ற தகவல் களஞ்சியம் ஒரு காலத்தில் பணக்காரர்களின் […]

“துணிந்தவனுக்குத் தோல்வியில்லை..!” – ஒரு வெஸ்டர்ன் காலா சொன்ன வெற்றிக்கதை

இந்தக் கதையை ஆரம்பிக்கும் முன் நாம் சில விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் இந்தக் கதை உருவானதின் அவசியம் புரியும். அமெரிக்கா பெரிய நிலப்பரப்பு கொண்ட தேசம். ஆனால் இருப்பதோ, குறைவான பேருந்து வசதிகள். மெட்ரோ ரயில் ஓடும் நகரங்களில் இருப்பவர்கள் மட்டுமே கொடுத்து வைத்தவர்கள். மற்றவர்கள் நகரின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு விரைவாக செல்ல சொந்தமாக கார் வைத்திருக்க வேண்டும் அல்லது வாடகை காரில் சென்று வர வேண்டும். இதுதான் அவர்களுக்கு இருக்கும் […]

’நோ’ சொன்ன ஜெராக்ஸ்… நன்றி சொன்ன ஊழியர்… அடோப் நிறுவனத்தின் செம ஃப்ளாஷ்பேக்! – அத்தியாயம் 21

பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் கணினி செய்த புரட்சி அளப்பரியது. செய்திகளை எழுத்து அச்சுக்களாக கோத்துக்கொண்டு படங்களை அச்சுப்பிரதி எடுப்பதெல்லாம் மிகக் கடினமான, நிறைய மனித உழைப்புகளை கோரும் வேலை. ஒரு சிறு பிழை என்றாலும் திருத்துவது மிக கடினம். இந்த ஸ்டார்ட்அப் உருவாகும் வரை இப்படிதான் சென்று கொண்டிருந்தது அச்சு ஊடகம். அதன் பின் நடந்ததெல்லாம் அசுரத்தனமான மேஜிக். அடோப் சிஸ்டம்ஸ் என்றால் உங்களுக்கு ஞாபகம் வருவது கடினம். போட்டோஷாப் என்றால் உடனே ஞாபகம் வந்துவிடும். அச்சு ஊடகத்தின் […]

டேட்டிங் சைட் டு எம்ப்ளாய்மென்ட் எக்ஸ்சேஞ்ச்… லிங்க்ட்இன் சாதித்த கதை!

சமூக வலைதளங்கள் என்றாலே பொழுதுபோக்கு, கலாட்டா, செல்பி எடுத்து புகைப்படங்களை பகிர்தல், மீம்ஸ் செய்து வெளியிடுவது எனப் பொதுவானது என்றுதானே நினைப்பீர்கள். ஆனால், இந்த சமூகவலைதளத்தில் அப்படி கும்மி அடித்துவிட முடியாது. காரணம் இங்கே நிறைய பிக்பாஸ்கள் இருப்பார்கள். இங்கே பிக்பாஸ் என்பது உவமை அல்ல; உண்மை. அவர்கள் உங்களைக் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். இங்கே ஜாலி கேலி என்பதையெல்லாம் தாண்டி, உங்களுடைய பொறுப்புஉணர்ச்சிதான் இங்கே முக்கியம். ஆகவே யாராக இருந்தாலும் பொறுப்புடன் பதிவிட வேண்டும். பதினைந்து […]

Enjoy this blog? Please spread the word :)