Day: September 26, 2017

இவரைத் தொட இன்னொருவன் பிறந்துதான் வரணும்! பேஸ்புக் கதை அத்தியாயம் 25

September 26, 2017

அமெரிக்காவின் கெண்டகி மாநிலத்தில் ஒரு சிறு கிராமத்தில் ஓர் அழகான குடும்பம். பெற்றோர்கள் ஐந்து பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தபோது அந்த கோர தீ விபத்து நடந்தது. அந்த விபத்தில் பெற்றோர்கள் இருவரும், அவர்கள் வசித்த வீடும் எரிந்து சாம்பலாயின. ஐந்து பிள்ளைகளும் வெவ்வேறு உறவினர்களால் தத்து எடுக்கப்பட்டு பிரிந்தனர். அவர்கள் வளர்ந்து பெரியர்வர்கள் ஆனதும் ஒருவரை ஒருவர் தேடி அடையாளம் கண்டு இணைந்தனர். கடைக்குட்டி லின்னை தவிர. லின்னின் கடைசி அக்கா டெஸ்ஸாவிற்கு மட்டும் எப்படியாவது […]

Read More

கூகுளாண்டவர் கதை தெரியுமா?! #StartUpBasics அத்தியாயம் 24

September 26, 2017

”கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்குமென்றார் கூகுளாண்டவர்” என்று நாங்கள் வேடிக்கையாக பாடுவதுண்டு. அந்த அளவிற்கு ஒரு தேடுபொறி ( Search Engine) நமது அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக, மாபெரும் வரமாக மாறி இருக்கிறது. எது ஒன்றை தெரிந்துகொள்ளவும் அந்தத் துறையை சார்ந்தவரை தேடி காத்திருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. உலகம் இன்று கைபிடியில்; தகவல்கள் இன்று விரலிடுக்கில் என்று மாற்றியது கூகுள்தான். ஏன் கூகுளுக்கு முன்பு எந்த தேடுபொறியும் இல்லையா.. கூகுள் மட்டும் தான் இதை செய்கிறதா என்று கேட்டீர்கள் என்றால் […]

Read More

நூற்றாண்டையே உலுக்கிய 140 எழுத்துகள்… ட்விட்டர் எனும் அசுரன்! #StartUpBasics அத்தியாயம் 23

September 26, 2017

‘அரேபிய வசந்தம்’ எனப்படும் இந்த நூற்றாண்டில் நடந்த மிகப் பெரிய மக்கள் புரட்சி வளைகுடா நாடுகளின் சர்வாதிகாரிகள் பலரை தூக்கி அடித்தது. உல்லாச வாழ்வில் திளைத்த அரேபிய மன்னர்களை நடுங்க வைத்து, மக்களின் பக்கம் திருப்பி எண்ணற்ற சலுகைகளை அள்ளிக் கொடுத்து ஆட்சியை தக்கவைக்க செய்தது. அன்று எந்த அரசாலும் இப்புரட்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. அரசுகள் விழித்துக்கொள்ளும் முன்பே இந்த காட்டுத்தீ பரவிவிட்டது. இதை சாத்தியப்படுத்தியது ஒன்றே ஒன்று தான். ட்விட்டர் என்ற இணையக் குருவி. இந்த […]

Read More

Enjoy this blog? Please spread the word :)