அறியப்படாத தமிழகம் – தொ.பரமசிவம்

2000 பக்கங்களுக்கும் அதிகம் கொண்ட பொன்னியின் செல்வனை படிக்க நான் எடுத்துக் கொண்டது வெறும் ஆறு நாள் மட்டுமே.

ஆனால் 130 பக்கங்கள் கொண்ட ” அறியப்படாத தமிழகம் – தொ.பரமசிவம்” எழுதிய நூலை படிக்க 12 நாட்கள் எடுத்துக்கொண்டேன். காரணம் நேரமின்மையோ அல்லது பிற பிரச்சனைகளோ இல்லை

ஒவ்வொரு அத்தியாயத்தையும் அசை போட நேரம் வேண்டி இருந்தது. ஒவ்வொன்றும் நேரடியாக நம் வாழ்வில் தொடர்புடைய நாம் இதுவரை அறிந்திடாத புதிய கதைகளை தொன்ம தகவல்களை தருகிறது. மனதின் பல கதவுகளை திறந்திட உதவியது.

தென்னிந்தியாவில் இந்த மொட்டை போடு பழக்கம் எப்படி வந்தது. யார் கொண்டுவந்தார்கள் என்ற கேள்வி எனக்குள் பலநாள் இருந்தது. அதேபோல பள்ளி என்றால் படுக்கை அறையை குறிக்கும் சொல்லாயிற்றே அது எப்படி கல்விகூடத்தை குறிக்கும் சொல்லாக மாறியது. விநாயகர் எப்படி இங்கு வந்தார். யார் மூலம் வந்தார். பல்லவர்களின் வாதாபி படையெடுப்பின் போது விநாயகர் வழிபாடு வந்தாக சொல்லப்பட்ட கதை தெரியும். ஆனால் அது உண்மை இல்லை.

சில தகவல்கள் எனக்கு முன்பே தெரியும். அது மீண்டும் இந்த புத்தகம் மூலம் உறுதிபடுத்தப்பட்டது. உதாரணத்திற்கு திபாவளி புகுந்த கதை.

சில இடங்களில் மிக ஆச்சர்யமான தகவல்-வெடிகுண்டுகளை வைத்து இந்த புத்தகம் நமது மொத்த நம்பிக்கையையும் கலைத்து போட்டுவிடுகிறது.

பார்ப்பனியத்தின் அஸ்திவாரத்தை அவ்வப்போது கேள்வி எழுப்பி ஆட்டுகிறது. எவ்வளவு முட்டாளாக்கி வைத்திருக்கிறார்கள் என்று தோன்றவைக்கிறது. வெட்கம் பிடுங்கிதின்கிறது.

ஆகவே அறிவை வளர்த்துக்கொள்ள அல்லது உங்கள் தொன்மத்தின் அடையாளங்களை புரிந்து கொள்ள, வழிவழியாக வந்த புளுகுமூட்டைகளில் இருந்து உங்களை காத்துக்கொள்ள இந்த புத்தகத்தை படிக்கவேண்டியது.
அவசியம்.

3 வருடங்களுக்கு முன்பு எழுதியதன் மீள் பதிவு.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enjoy this blog? Please spread the word :)