About Me

என்னை பற்றி சொல்வதற்கு ஏதாவது இருக்க வேண்டும் என்று தான் இந்த தளமும் இதில் உள்ள கட்டுரைகளும். மற்றபடி நான் ஒரு இணையதள மென்பொருள் வடிவமைப்பாளன். பன்னிரண்டு வருடங்கள் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்துவிட்டு என்னை நான் கண்டறிய சொந்தமாக ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் அமைத்து கம்மாடிட்டி மற்றும் பங்குச்சந்தைக்காக மூன்று மொபைல் ஆப்புகளை உருவாக்கி கூகிள் ப்ளே சந்தையில் வெளியிட்டிருக்கிறேன். ஸ்டார்ட்அப் யோசனைகளை உருவாக்குவதும் கற்பனை செய்வதும் பிடித்தமான ஒன்று.  அது தவிர நிறைய ஊர் சுற்ற பிடிக்கும். புகைப்படங்கள் எடுக்கப் பிடிக்கும். எண்ணற்ற புத்தகங்கள் வாசிக்க பிடிக்கும். பகுத்தறிவு தளத்தில் நிறைய பேச படிக்க பிடிக்கும். கற்றல் பிடிக்கும். காதல் பிடிக்கும். காமம் பிடிக்கும். கவிதை பிடிக்கும். இசை பிடிக்கும். வண்ணங்கள் பிடிக்கும். வடிவங்கள் பிடிக்கும். அறிவியல் பிடிக்கும். நம்பிக்கை பிடிக்கும். சிற்பம் பிடிக்கும். சமையல் பிடிக்கும். குழந்தைகள் பிடிக்கும். மழை பிடிக்கும். மலை பிடிக்கும். அன்பு பிடிக்கும். உற்சாகம் பிடிக்கும். நடனம் பிடிக்கும். தூக்கம் பிடிக்கும். துள்ளல் பிடிக்கும். சவால்கள் பிடிக்கும்.  தேடல்கள் பிடிக்கும். நிறைய நிறைய திட்டங்கள் உண்டு.  வானம் தாண்டிய கனவுகள் உண்டு. அந்த கனவுகளுக்காக செய்யும் முயற்சிகள் பிடிக்கும். 

You can reach me @