கட்டுரைகள்

இவரைத் தொட இன்னொருவன் பிறந்துதான் வரணும்! பேஸ்புக் கதை அத்தியாயம் 25

September 26, 2017

அமெரிக்காவின் கெண்டகி மாநிலத்தில் ஒரு சிறு கிராமத்தில் ஓர் அழகான குடும்பம். பெற்றோர்கள் ஐந்து பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தபோது அந்த கோர தீ விபத்து நடந்தது. அந்த விபத்தில் பெற்றோர்கள் இருவரும், அவர்கள் வசித்த வீடும் எரிந்து சாம்பலாயின. ஐந்து பிள்ளைகளும் வெவ்வேறு உறவினர்களால் தத்து எடுக்கப்பட்டு பிரிந்தனர். அவர்கள் வளர்ந்து பெரியர்வர்கள் ஆனதும் ஒருவரை ஒருவர் தேடி அடையாளம் கண்டு இணைந்தனர். கடைக்குட்டி லின்னை தவிர. லின்னின் கடைசி அக்கா டெஸ்ஸாவிற்கு மட்டும் எப்படியாவது […]

Read More

கூகுளாண்டவர் கதை தெரியுமா?! #StartUpBasics அத்தியாயம் 24

September 26, 2017

”கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்குமென்றார் கூகுளாண்டவர்” என்று நாங்கள் வேடிக்கையாக பாடுவதுண்டு. அந்த அளவிற்கு ஒரு தேடுபொறி ( Search Engine) நமது அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக, மாபெரும் வரமாக மாறி இருக்கிறது. எது ஒன்றை தெரிந்துகொள்ளவும் அந்தத் துறையை சார்ந்தவரை தேடி காத்திருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. உலகம் இன்று கைபிடியில்; தகவல்கள் இன்று விரலிடுக்கில் என்று மாற்றியது கூகுள்தான். ஏன் கூகுளுக்கு முன்பு எந்த தேடுபொறியும் இல்லையா.. கூகுள் மட்டும் தான் இதை செய்கிறதா என்று கேட்டீர்கள் என்றால் […]

Read More

நூற்றாண்டையே உலுக்கிய 140 எழுத்துகள்… ட்விட்டர் எனும் அசுரன்! #StartUpBasics அத்தியாயம் 23

September 26, 2017

‘அரேபிய வசந்தம்’ எனப்படும் இந்த நூற்றாண்டில் நடந்த மிகப் பெரிய மக்கள் புரட்சி வளைகுடா நாடுகளின் சர்வாதிகாரிகள் பலரை தூக்கி அடித்தது. உல்லாச வாழ்வில் திளைத்த அரேபிய மன்னர்களை நடுங்க வைத்து, மக்களின் பக்கம் திருப்பி எண்ணற்ற சலுகைகளை அள்ளிக் கொடுத்து ஆட்சியை தக்கவைக்க செய்தது. அன்று எந்த அரசாலும் இப்புரட்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. அரசுகள் விழித்துக்கொள்ளும் முன்பே இந்த காட்டுத்தீ பரவிவிட்டது. இதை சாத்தியப்படுத்தியது ஒன்றே ஒன்று தான். ட்விட்டர் என்ற இணையக் குருவி. இந்த […]

Read More

நவீன யுகத்தின் மந்திரச்சாவி டிஜிட்டல் மார்கெட்டிங் பகுதி-3

September 14, 2017

வர்த்தகநோக்கில் பார்த்தால் டிஜிட்டல் மார்கெட்டிங்கில் பல கிளைகள் உண்டு. இணையதளம், மொபைல் ஆப் போன்றவை டிஜிட்டல் மூலப்பொருள் தான். மார்கெட்டிங் அல்ல. தேடுபொறி தேர்வுநுட்பம் Search Engine Optimization உங்கள் நிறுவனத்தை சந்தைபடுத்த ஒரு இணைய தளத்தை ஆரம்பித்து அதில் உங்கள் பொருளை பற்றி அல்லது சேவையை பற்றி சொல்லிவிட்டால் ஆச்சா.. அது மக்களுக்கு போய் சேர வேண்டும் அல்லவா.. அது எப்படி போய் சேரும். மக்கள் Google, Yahoo, Bing போன்ற இணைய தேடுபொறிகளில் சென்று […]

Read More

நவீன யுகத்தின் மந்திரச்சாவி டிஜிட்டல் மார்கெட்டிங் பகுதி-2

September 4, 2017

நம்ம நாட்டிலும் டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை வெற்றிகரமாக செய்து தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியில் அமர்ந்தது. அது வேறு யாருமல்ல பிஜேபி. இன்று இந்த கட்சி மிகப்பரவலாக டிஜிட்டல் மார்கெட்டிங் செய்துகொண்டே வருகிறது. தங்கள் ஆட்சியின் மீதான விமர்சனத்தை இதன் மூலமாகவே எளிதாக கடக்கிறது. இல்லையென்றால் இன்று இந்த அரசாங்கம் நிலைத்திருக்க வாய்ப்பில்லை. டிஜிட்டல் மார்கெட்டிங் என்பது இணையத்தில் விளம்பரம் செய்வது மட்டுமல்ல அது பல படிநிலைகள் கொண்டு செயல்படும். உங்களை எல்லோரும் அறிய செய்வது உங்கள் மேல் ஒரு […]

Read More

நவீன யுகத்தின் மந்திரச்சாவி டிஜிட்டல் மார்கெட்டிங் பகுதி-1

September 1, 2017

ஒரு திருவிளையாடல் கதையை ஞாபகப்படுத்துகிறேன். நாரதர் ஞானப்பழத்தை கொண்டுவந்து சிவனிடம் கொடுப்பார். சிவன் பார்வதியிடம் கொடுப்பார். பார்வதி பிள்ளைகள் சாப்பிடட்டும் என்பார். கொடுத்தால் முழுதாக கொடுக்கவேண்டும் இல்லையேல் கொடுக்க கூடாது பலனில்லை என்பார் நாரதர். போட்டி வைக்கிறார்கள் உலகை சுற்றிவர. முருகன் மயிலில் கிளம்பி உலகை சுற்ற கிளம்ப, விநாயகரோ கேள்வி மேல் கேள்வி கேட்டு உலகை சுற்றிவர உபாயம் கண்டுபிடிக்கிறார். அம்மையப்பனை சுற்றி, உலகை சுற்றிய கணக்கு காட்டி ஞானப்பழத்தை தட்டிச் செல்கிறார். இதில் விநாயகர் […]

Read More

ஸ்டார்ட்அப் ZOHO 500 மில்லியன் டாலர் நிறுவனமாக வளர்ந்தது எப்படி?

August 25, 2017

ஸ்டார்ட்அப் உருவாக்கத்தின் பாலபாடம் சந்தையின் தேவையை சரியாக கணித்து, அதில் உள்ள இடைவெளிகளை பூர்த்தி செய்ய வேண்டிய தொழில்நுட்பத்தை கண்டறிவது. அதை எந்த முன் அனுபவமும் தேவையின்றி எவரும் புரிந்து கொள்ளக்கூடிய மிக எளிமையான வடிவத்தில் தயாரித்து வழங்குவது மிக அவசியம். இதை மிகச் சரியாக செய்து வெற்றி மேல் வெற்றி பெற்ற ஒரு சென்னை ஸ்டார்ட்அப் தான் Zoho. 1996. இணையம் கொடிவிட்டு பரவ ஆரம்பித்த புதிது. நெட்வொர்க் மென்பொருட்களின் தேவை மிக அதிகமாக இருந்த […]

Read More

ஸ்டார்ட்அப் தொடங்க இந்தக் குணம் அதிஅவசியம்!

August 25, 2017

கனவு காணுங்கள் என்பார் அப்துல்கலாம். எல்லையை தாண்டி கனவு காணுங்கள் என ஒரு படி அதிகமாக சொல்லும் ஸ்டார்ட்அப் உலகம். அந்த உலகத்தில் போகத் துடிக்கும் எவரும் கனவிலும் நிகழாத காரியத்தை மேற்கொள்ள நேர்ந்தாலும் “இது நடக்க வாய்ப்பே இல்லை” என்று சொல்வது தவறு. இது நடக்க இன்று தொழில்நுட்பம் போதவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அப்படி யாரும் யோசிக்காத அல்லது யோசிக்க தயங்கிய ஒரு ஐடியாவை வெற்றிகரமாக துணிந்து செய்துகொண்டிருப்பவர் தான் எலன் மஸ்க் […]

Read More

நீங்கள் நம்பும் விஷயத்துக்கு ரிஸ்க் எடுங்கள்… எலன் மஸ்க் செய்தது அதுதான்!

August 25, 2017

‘வானம் வசப்படும்’ என்ற இந்த சொற்றொடர் தமிழில் நாவல்கள், கதைகள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்படங்கள், திரைப்பாடல்கள் என்று நிறைய வந்துள்ளது. காரணம் அந்த சொற்களில் உள்ள பிரமாண்டமான ஊக்கசக்தி. உண்மையிலேயே வானத்தை வசப்படுத்திய மனிதர் என்றால் அது எலன் மஸ்க் தான். Zip2வில் இருந்து 22மில்லியன் டாலர்களுடன் வெளியே வந்தவர் X.com என்ற பெயரில் சொந்த முதலீட்டில் ஆன்லைன் வங்கி வர்த்தக நிறுவனத்தை தொடங்குகிறார். இதே தொழில்நுட்பத்தில் Confinity என்ற இன்னொரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தோடு மல்லுக்கட்டவேண்டி இருக்கிறது. […]

Read More

ஏறி அடிக்கணும்னா இறங்கி வேலை பாரு..! இது டோனி ஸ்டைல்

August 25, 2017

டோனி அடுத்த இன்னிங்க்ஸ்க்கு தயாராகி வருகிறார். ஆனால் அதற்குமுன் நிறைய தேடுவார். அவர் தேடல் கைகூடி விட்டால் துணிந்து அடித்து விளையாடுவார். நான் நம்ம மகேந்திரசிங் தோனியை சொல்லவில்லை. ஜாப்போஸ்(Zappos) நிறுவனர் டோனி ஷெய்(Tony Shieh) பற்றி சொல்கிறேன். ஒருநாள் நிக் ஸ்வின்மன்(Nick Swinmurn) என்ற தொழில்முனைவோர் ஆன்லைன் மூலமாக ஷூ, செப்பல் உள்ளிட்ட பலதரப்பட்ட காலணிகளை விற்கமுடியும், அதற்கு முதலீடு வேண்டுமென்றும் டோனிக்கு மெயில் அனுப்புகிறார். முதலில் கண்டுகொள்ளாத டோனி, நிக்கின் கடைசி மெயிலில் ஒரு […]

Read More

Enjoy this blog? Please spread the word :)