Category: பத்திரிகை

புலித்தோல் போர்த்தி பூனை வென்ற கதை..!

ஸ்டார்ட்அப் கதைகளில் சில விசித்திரமான, இப்படி கூட நடக்குமா என்று ஆச்சர்யப்பட வைக்கும் சம்பவங்களும் நடக்கும். நீங்கள் ஒரு பொருளை விற்கிறீர்கள். அதே பொருளை அனுபவம் இல்லாத புதியவர்கள் உங்களிடம் இருந்து கடனாக வாங்கி அந்த பொருளுக்கு வண்ணம் அடித்து, அழகாக பேக்பண்ணி அதே சந்தையில் விற்று உங்களைவிட அதிகம் சம்பாதிக்கிறார்கள். அதுவும் மிக சின்னக் குழு இதை சாதித்தார்கள் என்றால்? அதை தான் மின்ட்(mint) செய்து காட்டினார்கள். 1999ல் வெங்கட் ரங்கன் என்ற அமெரிக்கவாழ் இந்தியர் […]

ஆப்பிள் என்றால் ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டுமல்ல… இந்த X-ம் தான்!

ஆப்பிள் கம்ப்யூட்டர் என்றவுடன் எல்லோருக்கும் ஞாபகம் வரும் பெயர் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆனால் ஸ்டீவ்விற்கு வேறொருவர்தான் கண் முன் நிற்பார். எல்லோரும் ஸ்டீவ்விற்காக காத்திருக்க இவர் அந்த இன்னொருத்தருடன்தான் பொழுதுகளை கழித்தார். நீங்கள் நினைப்பது போல அந்த X ஸ்டீவின் காதலி அல்ல. அதற்கும் மேலே. ஆன்மிகத் துணைவர் (Spritual Partner). ஆம் அப்படிதான் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை வடிவமைப்பு அதிகாரி ஜோனதன் ஐவியை (Jonathan Ive) பற்றி ஸ்டீவ் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டார். ஆப்பிள் நிறுவனர் […]

ஒரு நிராகரிப்பின் பிரமாண்ட பதிலடி..! வாவ்… வாட்ஸ்அப் வரலாறு!

ஒரு தொழில்முனைவோராக மட்டுமல்ல வாழ்வில் வெற்றி பெறத் துடிக்கும் எவரும் ஒருமுறை வாட்ஸ்அப்பின் கதையை படித்துவிடுவது நல்லது. அதில் அத்தனை பாடங்கள் உள்ளன. 2007ஆம் ஆண்டில் யாகூவில் இருந்து இரண்டு இளைஞர்கள் விலகுகிறார்கள். அவர்கள் அமெரிக்காவின் தென்பகுதியை நோக்கி ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்கிறார்கள். பிரையன் அக்டன் (Brian Acton) , ஜான் கோம் (Jan Koum) என்ற அந்த இளைஞர்கள் அந்தப் பயணத்திற்கு பிறகு ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்று பெரிய இலக்கை நோக்கி முயல்கிறார்கள். 2008இன் […]

ஆன்லைன் வணிக அசுரன் அலிபாபா..! உருவான கதை தெரியுமா?

ஒரு எலெக்ட்ரானிக் நிறுவனத்தின் தலைவர் தன் இரு சேல்ஸ்மேன்களிடம் “ஆப்பிரிக்காவிற்கு செல்லுங்கள். அங்கு நமது ரேடியோவிற்கு சந்தை இருக்கிறதா” என்று பார்த்து வாருங்கள் என்று அனுப்பினார். இருவரும் ஆப்பிரிக்கா முழுதும் சுற்றிவிட்டு வந்து நிறுவனரிடம் ரிப்போர்ட் செய்தார்கள். முதல் சேல்ஸ்மேன் “நம்ம ரேடியோவிற்கு அங்கு சந்தையே இல்லை. ஏனென்றால் அங்கு பெரும்பாலான ஊர்களில் மின்சாரமே இல்லை. மின்சாரவசதி இல்லாத ஊரில் எப்படி நம்ம பொருள் விற்கும்?” என்று கூறினார். இரண்டாவது சேல்ஸ்மேனிடம் வரும்போதே அத்தனை உற்சாகம். “சார். […]

10 வயதில் சர்வர் வேலை… 20 வயதில் சர்வரைத் தயாரிக்கும் வேலை..!

மிரட்டலான ஸ்டார்ட்-அப் கதை என்றால் அது டெல் நிறுவனத்தின் நிறுவனர் மைக்கேல் டெல்லின் கதை தான். ஒரு பிசினஸில் நுழைவதற்கு உயர்நிலை பள்ளியில் படித்த சான்றிதழ் அல்லது அதற்கு இணையான தேர்வில் எழுதி வென்ற சான்றிதழ் வேண்டும். அதற்காக விண்ணப்பிக்கிறார். அப்போது அவரின் வயது வெறும் எட்டு என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அப்படிதான் நடந்திருக்கிறது. பத்துவயதிற்கு பிறகு அவரது பள்ளிப்படிப்பு அத்தனையும் அவரது வருமானத்தில் செல்கிறது. அதற்காக அவர் செய்யாத வேலை இல்லை. பன்னிரெண்டு வயதில் […]

அமெரிக்காவில் ஒரு மிஸ்டர் பாரத் கதை..!

1980 களில் வெளிவந்த ரஜினிகாந்த் திரைப்படத்தைப் போல நம்பமுடியாத கதை அவருடையது. ஒரு யூத இளம்பெண் அமெரிக்க போர்விமானியின் காதலில் விழுகிறார். காதல் அவள் வயிற்றில் ஒரு குழந்தையைக் கொடுக்கிறது. காதலன் சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிடுகிறான். அவள் மிக இளம்வயதில் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அவளால் அந்தக் குழந்தையைப் பேணிகாக்க முடியவில்லை. குழந்தைக்கு நிமோனியா தாக்குகிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை. தன் ஒன்பது மாதக்குழந்தையைக் குழந்தைபேறு இல்லாத உறவுக்கார தம்பதிகளிடம் கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறார். அதன்பிறகு அந்தத் தம்பதிகள் நியூயார்க்கில் […]

கூகுள் முதல் ட்விட்டர் வரை… அமேசான் நிறுவனரின் ஸ்டார்ட்அப் காதல்!

ஜெப் பெசாஸ் துறுதுறுவென்று இருக்கும் குழந்தை. 4 வயதாக இருக்கும்போது அவரது பெற்றோர்கள் விவாகரத்து பெற்று பிரிகிறார்கள். பின்னர் ஜெப்பின் தாயார் ஜாக்லின் கியூபாவில் இருந்து பிழைக்க வந்த மிக்கேல் பெசாஸ் என்ற எஞ்சினியரை மணக்கிறார். வளர்ப்புத் தந்தையின் பெயரே இவரது துணைப்பெயராக சேர்கிறது. சிறுவயதில் நிறைய புத்தகங்களை படிக்கிறார் ஜெப். வளர்ந்து இளைஞரான பிறகு கல்லூரியில் படித்து முடித்தபின் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல வேலைகளை செய்கிறார். ஆனால் எந்த வேலை செய்தாலும் அதில் அவரது தடம் […]

அகதி ஆக்கியது டிரம்ப்… அடைக்கலம் தந்தது யார்?

ஒரு நண்பர் கேட்டார். “ஸ்டார்ட்அப் பற்றி எழுதுறீங்க சரி. ஆனால் நாட்டு நடப்பு எதுவும் சரியில்ல… டிமானிடைசேசன் ஜிஎஸ்டி என்று அரசு நம்மை வாட்டி வதைக்குது. இப்போ எப்படிப்பா தொழில் தொடங்குவது”. அவருக்கு Airbnbயின் கதையைச் சொல்ல ஆரம்பித்தேன். இறுதிவரை கேட்டுவிட்டு இப்படி சொன்னார் ”உண்மை தான்… வெற்றி என்பது நேரம் காலத்தில் எல்லாம் இல்லை… வெல்வோம் என்ற நம்பிக்கையில் தான் இருக்கிறது.” 2008 உலகப் பொருளாதாரம் மேற்குலக நாடுகளை உருட்டி எடுத்த நேரம். உலக பணக்காரர்கள், […]

கேண்டி கிரஷ் விளையாடாமல் உங்களால் இருக்க முடியாது. ஏன் தெரியுமா?

விளையாட்டு என்பது இந்த நூற்றாண்டில் வெறும் வேடிக்கை அல்ல. அது ஒரு சீரியஸ் பிஸினஸ். அது, களத்தில் ஆடும் ஆட்டம் என்றாலும், கைக்குள் அடங்கும் மொபைலில் ஆடும் ஆட்டம் என்றாலும் பில்லியன் டாலர்கள் புழங்கும் பெரிய பிஸினஸ். இப்போதெல்லாம், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதற்குத் தயங்குவதே இல்லை. அவர்கள், ஒரு மொபைலில் அந்த கேம் இருந்துவிட்டால் போதும், பசி தெரியாது, தூக்கம் தெரியாது, நீண்ட காத்திருப்பு தெரியாது, கவலை தெரியாது. எமனே பாசக்கயிற்றுடன் வந்தாலும் ”இருப்பா, கொஞ்சம் […]

இது சின்ன பசங்க காலம்… பெருசுகளை இன்ஸ்டாகிராம் தோற்கடித்த கதை!

ஒரு நூற்றாண்டுக்கு மேல் புகைப்படத் துறையில் ஆண்டு வந்த பல பெரிய நிறுவனங்கள் இன்று காணாமல் சென்றுவிட்டன. அந்த புகைப்படத்துறை மக்கள் கையில் ஒரு மொபைல் போனாக சுருங்கி புது அவதாரம் எடுக்கும்போது சில பல ஜிம்மிக்ஸ் வேலைகளைப் பார்த்து அதை இணையத்தில் ஒருத்தருக்கு ஒருத்தர் பகிரச் செய்து அதன்மூலம் பெரிய அளவில் வெற்றி பெற்ற ஸ்டார்ட்அப் தான் இன்ஸ்டாகிராம். இன்று இன்ஸ்டாகிராம் எந்தளவுக்கு எல்லோரையும் வியாபித்து இருக்கிறது என்றால் டிவிட்டர், ஸ்னாப்சாட் போன்ற சீனியர்களையும் ஓரங்கட்டி […]

Enjoy this blog? Please spread the word :)